/* */

சான்றிதழ், உரிமம் பெறாமல் உணவு வணிகம் செய்யக்கூடாது: கலெக்டர் எச்சரிக்கை

உணவு பாதுகாப்புத்துறையில் பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் பெறாமல் உணவு வணிகம் செய்யக்கூடாது என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

சான்றிதழ், உரிமம் பெறாமல் உணவு வணிகம் செய்யக்கூடாது: கலெக்டர் எச்சரிக்கை
X

கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி. 

இது குறித்து அவர் இன்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்தவொரு உணவு பொருட்கள் சம்பந்தப்பட்ட வணிகரும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் பெறாமல் உணவு வணிகம் செய்யக்கூடாது.

பதிவுச் சான்றிதழ் கட்டணமாக வருடத்திற்கு ரூ.12 லட்சத்திற்கு குறைவான விற்று கொள்முதல் உள்ள அனைத்து உணவு பொருட்கள் தயாரிப்பாளர்களும், வியாபாரிகளும் தகுதி வாய்ந்தவர்கள். கட்டணம் ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும். உணவு பதிவுச் சான்றிதழ் இன்றி வணிகம் செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், உரிமக் கட்டணம் செலுத்த வருடத்திற்கு ரூ.12 லட்சத்திற்கு மேற்பட்ட விற்றுக் கொள்முதல் உள்ள வணிகர்களும் தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். கட்டணமாக அனைத்து சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள், ஓட்டல்கள், பேக்கரி, டீக்கடை ரூ.2 ஆயிரம். தயாரிப்பாளர்கள் ஒரு நாளுக்கு ஒரு டன் அளவிற்குள் ரூ.3 ஆயிரம். ஒரு நாளுக்கு 2 டன் அளவு வரை ரூ.5 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் ஒரு வருடம் முதல் 5 வருடம் வரை பெற்றுக்கொள்ளலாம். உரிமம், பதிவுச் சான்றிதழ் காலாவதியாவதற்கு 30 தினங்களுக்கு முன்னதாக புதுப்பித்தல் விண்ணப்பம் பெற வேண்டும். உரிமம், பதிவுச் சான்றிதழ் பெறும் நடைமுறைகள் மற்றும் கட்டணம் செலுத்துதல் ஆகியவை அனைத்து உணவு பாதுகாப்புத்துறையின் இணையதளத்தின் மூலமாகவே செய்திடல் வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம் இன்றி வணிகம் புரிவது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாகும்.

மேலும், ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் எந்தவொரு உணவு வணிகரும் சூடான பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைக்கக் கூடாது. தமிழக அரசால் தடை செய்யப்படட பிளாஸ்டிக்குகளை பயன்படுத்த கூடாது. எந்தவொரு வணிகரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, நிக்கோடின் கலந்த உணவுப் பொருட்களை உற்பத்தி, போக்குவரத்து மற்றும் விற்பனை செய்திடல் கூடாது.

நுர்வோரும் பரிவு 40, உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006ன் கீழ் உணவு மாதிரி எடுத்து, உரிய கட்டணம் செலத்தி, உணவு பாகுப்பாய்வகத்திற்கு அனுப்பலாம். மேலும், உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு 9444042322 என்ற செல்போன் மூலம் தெரிவிக்கலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

Updated On: 16 Sep 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?