/* */

கிருஷ்ணகிரியில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை: ஏராளமானோர் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை:  ஏராளமானோர் பங்கேற்பு
X

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை.

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில ஆலயத்தில், நல்லிரவு கிறிஸ்து பிறப்பு சிறப்பு பிரார்த்தனை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

திருத்தல பங்குத்தந்தை அருட்திரு. இசையாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனையின் போது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு, கிறிஸ்து பிறப்பு சிறப்பு விழிபாட்டில் ஈடுபட்டனர்.

திருத்தலத்தின் பொன் விழாவை முன்னிட்டு, புனரமைப்பு பணிகள் நடைபெறுவதால் தேவாலயத்தின் முன்புறம் இருக்கும் புனித அன்னால் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தொடர்ந்து, உலக நன்மைக்காகவும், உலக மாந்தர் அனைவரும் நலமுடன் வாழவும், அன்பு சமாதானத்தில் திளைத்திடவும் குருக்கள் சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். பிரார்த்தனையின்போது பாடல் குழுவினரால், சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைத்து பாடப்பட்டது.

இந்த சிறப்பு பிரார்த்தனையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தாடைகளை அணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கலந்துக்கொண்டனர். சிறப்பு பிரார்தனையின் முடிவில் அனைவரும் தங்களுக்குள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டனர்.

வழக்கம் போல திருத்தல வளாகத்தில் இயோசு பாலகனின் பிறப்பை உணர்த்தும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தது.

Updated On: 25 Dec 2021 4:47 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!