/* */

அதிமுகவை அழிக்க ஸ்டாலின் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி சோதனை: கே.பி.முனுசாமி

அதிமுகவை அழிக்க ஸ்டாலின் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்துக்கிறார் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அதிமுகவை அழிக்க ஸ்டாலின் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி சோதனை: கே.பி.முனுசாமி
X

செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி.

கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், முன்னாள் அமைச்சர் தர்மபுரி மாவட்ட செயலாளர் கேபி அன்பழகன் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு தோல்வி அடைந்துள்ளது.

அந்த தோல்வியை மக்களிடம் இருந்து மாற்ற திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே திமுகவின் இறுதி எதிரியான அதிமுகவை அழிக்கும் நோக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு இந்த அரசு சோதனை நடத்துகிறது. ஒருபோதும் அதிமுகவை அச்சுறுத்தவே அழிக்கவோ முடியாது. கே.பி.அன்பழகன் பாரம்பரியமாக தொழில் செய்யும் குடும்பம் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக அரசு பொறுப்பேற்று 9 மாதங்களில் எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களும் செய்யவில்லை. அவர்கள் செய்த ஒரே திட்டம் பொங்கல் தொகுப்பு வழங்கியது மட்டுமே அதிலும் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. 2.15 கோடி குடும்ப அட்டைக்கு 1159 கோடி ரூபாய்க்கு பொங்கல் தொகுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு குடும்ப அட்டைக்கு 570 ரூபாய் ஆகிறது.

ஆனால் அரசு வழங்கிய தொகுப்பின் சிலரை விலையுடன் ஒப்பிடும் போது 300 ரூபாய் முதல் 350 ஆகிறது. அதன்படி ஒரு குடும்ப அட்டைக்கு 270 ரூபாய் மிக பெரிய ஊழல் முறைகேடு நடந்துள்ளது. பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக புகார்கள் வந்த நிலையில் முதலமைச்சர் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். அந்த அறிவிப்பு அறிவிப்பாக மட்டுமே உள்ளது. இந்த முறைகேடு ஊழல் தொடர்பாக அரசு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும்.

குடியரசு விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி எங்கள் அனுமதி மறைந்து கொண்டிருக்கிறது அரசியல் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

பேட்டியின்போது கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Updated On: 20 Jan 2022 1:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  2. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  3. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  4. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  5. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  7. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  8. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  10. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!