/* */

மூத்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது: கிருஷ்ணகிரி கலெக்டர்

மூத்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

HIGHLIGHTS

மூத்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது: கிருஷ்ணகிரி கலெக்டர்
X

மூத்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2021&22ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க 1.1.2001ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ. 72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தாசில்தார் அலுவலகத்தில் இணைய வழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைத்தளத்திலோ இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செயல்படுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.3500, மருத்துவப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். பூர்த்தி செய்யயப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் உதவி இயக்குநர், மாவட்ட தமிழ் வளர்ச்சி அலுவலகத்தில் வருகிற 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

Updated On: 1 July 2021 4:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?