/* */

எருது விடும் விழாவில் காயமடைந்தவர் மரணம்

எருது விடும் விழாவில் காயமடைந்தவர் மரணம்
X

கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழாவில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரியை அடுத்த வரட்டனப்பள்ளியில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எருதுகளும் பங்கேற்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் இந்தப் போட்டியை பார்வையிட்டனர். இந்த எருது விழாவின்போது எருதுடன் கட்டப்பட்ட கயிறு காலில் சிக்கியது.

இதில் பெங்களூரு விஜய நகரத்தை சேர்ந்த பத்மநாபன்(41), என்பவர் காயம் அடைந்தார். அவரை பெங்களுரூவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 4 Feb 2021 5:22 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்