/* */

கரூரில் ஆப் மூலம் அபராதம் செலுத்தலாம்

கரூரில் போக்குவரத்து விதிமுறை மீறும் வாகன ஓட்டிகள் ஆப் மூலம் அபராதம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கரூரில் ஆப் மூலம் அபராதம் செலுத்தலாம்
X

பைல் படம்.

தமிழ்நாட்டில் மோட்டார் வாகன விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் மீது பதியப்படும் வழக்குகளில், அபராதம் செலுத்துவதற்கு தமிழக காவல்துறையில் 2019 ம் ஆண்டு முதல் டெபிட் கார்டு , கிரிடிட் கார்டு மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் இந்த முறையில் உள்ள சிரமங்களை போக்கவும், மக்கள் எளிதாக அபராத தொகையை செலுத்தவும் தற்போது யுபிஐ மூலம் மக்கள் கூகுல் பே, பேடிஎம், பாரத் பே மற்றும் எல்லாவிதமான பணம் செலுத்தும் ஆப்.,கள் மூலமாக விரைவாகவும், எவ்விதாக சிரமமும் இன்றி மக்கள் அபராத தொகையை செலுத்தலாம்.

இந்த முறையானது தற்போது கரூர் மாவட்டத்திலும் நடைமுறையில் இருந்து வருகிறது. இம்முறையை பயன்படுத்தி அபராத தொகையை செலுத்தும் வகை முறைகளை மக்கள் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Updated On: 6 Sep 2021 1:30 AM GMT

Related News