/* */

அமராவதி ஆற்றில் மூழ்கி இளைஞரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர்

அமராவதி ஆற்றில் மூழ்கி மாயமான இளைஞரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

அமராவதி ஆற்றில் மூழ்கி இளைஞரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர்
X

அமராவதி ஆற்றில் மூழ்கி மாயமான இளைஞர் புவனேஷ்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் புவனேஷ் (23). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று மாலை நண்பர்கள் சிலருடன் பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றின் தடுப்பணை அருகே குளித்துள்ளார்.

மழை காரணமாக தற்போது, கரூர் அமராவதி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்று வரும் நிலையில், தண்ணீரின் இழுவை திறன் அதிகமாக இருந்து வருகிறது. இதை அறியாத இளைஞர்கள் அஜாக்கிரதையாக குளித்துள்ளனர். இந்தநிலையில், குளித்துக் கொண்டிருந்த இளைஞர் புவனேஷ் திடீரென நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனே கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இளைஞரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து வெளிச்சம் குறைந்து இரவான காரணத்தால் தேடும் பணியை தொடர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தற்காலிகமாக கைவிட்டனர். இதுகுறித்து கரூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  2. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  3. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  4. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  7. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா