/* */

பஞ்சாயத்து அலுவலகத்தில் திமுக பிரமுகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததால் சர்ச்சை

அருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் பி.பி கந்தசாமி என்பவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

HIGHLIGHTS

பஞ்சாயத்து அலுவலகத்தில் திமுக பிரமுகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததால் சர்ச்சை
X

திமுக பிரமுகர் பி.பி கந்தசாமி. 

கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, காதப்பாறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியரசு தின விழா இன்று நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவரின் அதிகாரம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பஞ்சாயத்து தலைவர் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. பஞ்சாயத்து செயலாளர் இருப்பினும் குடியரசு தினமான இன்று தேசியக் கொடியை அருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் பி.பி கந்தசாமி என்பவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தேசியக்கொடியை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில், கட்சிப் பிரமுகர்கள், கட்சி அலுவலகத்தில் ஏற்றலாம். இந்நிலையில், பஞ்சாயத்து அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டுப்பாட்டிலும், மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும், உள்ள நிலையில், இதுபோன்ற செயல் திமுகவினரின் அத்துமீறல் என்று கூறப்படுகிறது. பஞ்சாயத்து செயலாளர், ஊராட்சி ஒன்றிய பிடிஓ ஆகியோர்கள் இருக்கும் நிலையில், திமுக நிர்வாகி தேசியக் கொடியை ஏற்றி வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 26 Jan 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு