/* */

குமரியில் விவசாய நிலத்தில் புகுந்த யானை - விவசாயிகள் அச்சம்.

குமரி விவசாய நிலத்தில் புகுந்த யானையால் விவசாயம் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் மத்தியிலும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது

HIGHLIGHTS

குமரியில் விவசாய நிலத்தில் புகுந்த யானை -  விவசாயிகள் அச்சம்.
X

குமரி விவசாய நிலத்தில் புகுந்த யானை

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள தெள்ளாந்தி உடையார் கோணம் பகுதியில் பால் ரவீன் என்பவர் தனக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை, மா, வாழை போன்ற பயிர்களை பயிர் செய்துள்ளார்.

இந்நிலையில் இன்று அந்த பகுதிக்கு வந்த யானை ஒன்று தோட்டத்துக்குள் புகுந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களைப் பிடுங்கி நாசம் செய்தன.

மேலும் வாழை, மா, பலா கொண்ட மரங்களையும் சேதப்படுத்தியதோடு மூன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உருண்டு விளையாடி உள்ளது.

மேலும் அந்த யானை தொடர்ந்து அதே இடத்தில் நிற்பதால் பொதுமக்கள் மற்றும் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர்.

இதனிடையே யானையை விரட்ட வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சியை கண்டு பயம் கொள்ளாமல் யானை அங்கிருந்து நகராமல் நின்றது.

இந்த யானை கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வாழை தோட்டத்தில் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்து நாட்களாக இப்பகுதியில் வலம் வந்து கொண்டிருக்கும் யானை பொதுமக்கள் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே தொடர்ந்து அப்பகுதியில் வனவிலங்குகள் புகுவதால் பாதிப்பு ஏற்படும் நிலையில் தோட்டங்களில் மின் வேலிகள் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 1 Jun 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்