/* */

கொள்முதல் செய்யாததால் சாலையில் நெல்லை கொட்டி வைத்த விவசாயிகள்

குமரியில், கொள்முதல் செய்யப்படாததால், சாலையில் நெல்லை விவசாயிகள் கொட்டி வைத்து, வேதனையை வெளிப்படுத்தினர்.

HIGHLIGHTS

கொள்முதல் செய்யாததால் சாலையில் நெல்லை கொட்டி வைத்த விவசாயிகள்
X

தாழக்குடி பகுதியில் கொள்முதல் செய்ய அரசு முன் வராததால் தெருக்களில் கொட்டப்பட்டுள்ள நெல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், முதன்மை விவசாயமாக இருக்கும் நெல் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், அரசு அதிகாரிகள் செயல்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். தாழக்குடி பகுதியில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை, கொள்முதல் செய்ய அரசு முன் வராததால் தெருக்களிலும், சாலைகளிலும் நெல்லை கொட்டி வைத்துள்ள விவசாயிகள் அதனை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இதனிடையே அப்பகுதியில் பொதுமக்களை சந்திக்க சென்ற, கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான தளவாய் சுந்தரத்தை சந்தித்த விவசாயிகள், தங்கள் நிலையை விளக்கி உதவி கேட்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தளவாய் சுந்தரம், விவசாயிகள் நலனை பாதுகாக்காமல் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்யாமல், அரசு வஞ்சகம் செய்வதாக விவசாயிகள் குமுறுவதை குறிப்பிட்டார்.

அத்துடன், மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை உள்ளிட்ட அரசு துறைகள் கைவிரித்த நிலையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களோடு தானும், அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

Updated On: 23 Sep 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?