/* */

வாக்கு எண்ணிக்கை : 3281 அரசு ஊழியர்கள் - 700 காவல்துறையினர் பணியில் ஈடுபடவுள்ளனர்

காஞ்சிபுரம் 5 வாக்கு எண்ணிக்கைமையங்களில் 3281 அரசு பணியாளர்கள், 700 போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர்.

HIGHLIGHTS

வாக்கு எண்ணிக்கை : 3281 அரசு ஊழியர்கள் -  700 காவல்துறையினர் பணியில் ஈடுபடவுள்ளனர்
X

வாக்கு எண்ணிக்கை மையம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 என இரு தேதிகளில் 5 ஒன்றியங்களில் நடைபெற்றது. ஐந்து ஒன்றியங்களில் 1781 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 308 ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 69 ஆயிரத்து 224 பெண் வாக்காளர்களும் , இதரர் 18 பேர் என மொத்தம் 5 லட்சத்து 34 ஆயிரத்து 530 வாக்காளர்கள் தங்கள் வாக்கைச் செலுத்தி உள்ளனர்.

பதிவான வாக்குகளை என்ன நான்கு வாக்கு எண்ணிக்கை மையங்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையம் எல்லையிலும் குன்றத்தூர் வாக்கு எண்ணிக்கை மையம் சென்னை பெருநகர காவல் நிலையம் எல்லையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது முதலில் 302 டேபிள்களில் 1208 பேர் வாக்கு பிரித்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதேபோல் 5 ஒன்றியங்களிலும் 569 டேபிள்களில் 3281 அரசுப் பணியாளர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்க 3 ஏடிஎஸ்பி , 4DSP , 16 காவல் ஆய்வாளர்கள் , 560 காவலர்கள் என ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

வாக்கு பிரித்தல் , வாக்கு எண்ணுதல் எந்த பதவி என்பதை அறிந்துகொள்ள வாக்கு எண்ணிக்கை மையம் நுழைவுவாயில், வாக்கு எண்ணிக்கை அறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் டிஜிட்டல் பேனர்கள் மூலம் பார்வை வடிவில் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் பார்வையாளர் , மாவட்ட ஆட்சியர் , மாவட்ட வருவாய் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர், வட்டார பார்வையாளர் உள்ளிட்டோர் மட்டும் கைபேசி வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முகவர்கள் வேட்பாளர்கள் யாரும் கைப்பேசிகளை வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொண்டு வர வேண்டாம் எனவும் மீறும் பட்சத்தில் நுழைவு வாயிலில் பறிமுதல் செய்யப்பட்டு மாலை திருப்பி ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 64 நபர்களும் , ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் 98 பதவிகளுக்கு 384 நபர்களும் , 269 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 922 நபர்களும்‌, 1793 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5666 நபர்களும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  2. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  3. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  4. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அருகே கிணற்றை காணவில்லை என கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
  5. வீடியோ
    🔥Soori போல் Mimicry செய்து பங்கமாய் கலாய்த்த SK | Sivakarthikeyan |...
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  7. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  8. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  9. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  10. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!