/* */

காஞ்சிபுரத்தில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் துவக்கி வைப்பு

காஞ்சிபுரத்தில் TNPSC போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை ஆட்சியர் மா.ஆர்த்தி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் துவக்கி வைப்பு
X

டி.என்.பி.எஸ்.சி பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து மாணவர்களும் உரையாடிய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி.

காஞ்சிபுரம் மாவட்டம், வேலை வாய்ப்புத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (Group II/IIA) போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை இன்று மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி துவக்கி வைத்தார்

இதில் பேசிய ஆட்சியர் ஆர்த்தி, நானும் சில வருடங்களுக்கு முன்பு உங்களைப்போல் மாணவர்களாக தான் அமர்ந்து இருந்தேன், கடுமையான உழைப்புக்குப் பிறகு இப்பொழுது இந்த இடத்தில் அமர்ந்து உள்ளேன்.

மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அந்த வகையில் மாணவர்கள் அவர்களுடைய பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு மற்றும் போட்டித் தேர்வுகள் ஆகியவற்றை பயன்படுத்தி கொண்டு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவர்களில் சிலர் குழுவாக ஒன்றிணைந்து படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். சிலர், தனியாகவும் படிக்க விருவம்புவர். எனவே, உங்களுக்கென்று என்ன தனித்துவம் உள்ளதோ, அதையே மாவணவர்கள் பின்பற்ற வேண்டும்.

ஏனென்றால் நீங்கள் நிறைய புத்தகங்களை படிக்கும் பொழுது எதற்காக படிக்கிறோம், என்ன படிக்கிறோம், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவோமா என்று நிறைய குழப்பங்கள் வரலாம். வெற்றி என்பது அனைவருக்கும் உடனடியாக கிடைத்துவிடாது. அதேபோல், தோல்வியை கண்டு அஞ்சவும் கூடாது.

உதாரணமாக நானும் இந்திய ஆட்சிப் பணியில் முதல் முறை தோல்வி கண்டாலும், இரண்டாவது முறை முழு நம்பிக்கையுடன் வெற்றி பெற்றேன். மகளிரை பொறுத்தவரை போட்டி தேர்விற்கு தயாராகும் பொழுது அவர்களுக்கு சில இடர்பாடுகள் வரும். அவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் பேசி உரிய காலக்கெடுவுக்குள் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையுடனும், 100% அர்ப்பணிப்புடனும், சிரத்தையுடனும் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

மேலும் நடப்பு நிகழ்வுகளை பற்றிய சரியாக புரிதலுக்கு நடுநிலையான நாளேடுகளை படித்து குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு துறையின் மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) திருமதி.அ.அனிதா, வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் திரு.ஆர்.அருணகிரி மற்றும் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 4 March 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்