/* */

Today Trending News in Tamil-டாக்டரான, முதல் கல்லீரல் மாற்றுக் குழந்தை..!

இந்தியாவின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதல் குழந்தை, 25 ஆண்டுகளுக்குப் பின் மருத்துவரான தமிழகத்தின் நம்பிக்கை நாயகன்.

HIGHLIGHTS

Today Trending News in Tamil-டாக்டரான, முதல் கல்லீரல் மாற்றுக் குழந்தை..!
X

today trending news in tamil-மருத்துவரான சஞ்சய் கந்தசாமி (கோப்பு படம்)

Today Trending News in Tamil

தனக்கு உயிர் கொடுத்த அதே மருத்துவமனையில் 25 ஆண்டுகளுக்குப் பின் மருத்துவராக சேர்கிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சஞ்சய் கந்தசாமி. 1998ம் ஆண்டில் 18 மாதக் குழந்தையாக இருந்த சஞ்சய் கந்தசாமி, இந்தியாவின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதல் குழந்தை ஆவார்.

சஞ்சய் கந்தசாமி, தனது சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் மருத்துவராக பணியமர்த்தப்படுகிறார். இதுகுறித்து மருத்துவர் சஞ்சய் கந்தசாமி செய்திக்குறிப்பில் கூறுகையில்,

Today Trending News in Tamil

அவர்களின் பணியை மிக அருகில் இருந்து பார்த்தது எனக்கு மருத்துவராக வேண்டும் என்ற உறுதியை அளித்தது. உயிர்களைக் காப்பாற்றுவதில் எனது பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். வாழ்க்கையில் எந்த சவாலையும் ஒருவர் சமாளிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகவும் இருக்க விரும்புகிறேன் என்றார் சஞ்சய் கந்தசாமி.

சஞ்சய் கந்தசாமி பிறந்தபோது அவருக்கு பைலியரி ஆர்ட்டிசியா என்ற கல்லீரல் பிரச்னை ஏற்பட்டது. அதாவது, கல்லீரலில் இருந்து பித்தப்பைக்கு பித்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கல்லீரல் கோளாறு ஆகும்.

கல்லீரலின் உள்ளே அல்லது வெளியே உள்ள பித்தநீர் குழாய்கள் சாதாரணமாக வளர்ச்சியடையாதபோது இந்த நிலை ஏற்படுகிறது. அவரது உடல்நிலை கல்லீரல் செயலிழக்க வழிவகுத்ததால், இறுதியில் அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.

Today Trending News in Tamil


ஆகையால், அவரது தந்தையிடம் இருந்து 20 சதவிகித கல்லீரல் பெற்று கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் நிபுணர்கள் குழு மூலம் சஞ்சய் கந்தசாமிக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

பின்னர் நலமோடு இருந்த சஞ்சய் கந்தசாமி மருத்துவராக வேண்டும் என்ற இலக்கோடு படித்தார். தற்போது மருத்துவப் படிப்பு முடித்து தனக்கு எந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளிக்கப்பட்டதோ, அதே மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் விரைவில் மருத்துவராகப் பணியாற்ற உள்ளார்.

இதுகுறித்து இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையின் குழு மருத்துவ இயக்குநரும் மூத்த குழந்தை இரைப்பைக் குடலியல் நிபுணருமான மருத்துவர் அனுபம் சிபல் கூறுகையில், 'இந்தியாவின் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர் சஞ்சய் கந்தசாமி. இப்போது அவரும் ஒரு வெற்றிகரமான மருத்துவர் என்பது தன்னம்பிக்கையைத் தொலைத்தவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்வார், சஞ்சய் கந்தசாமி' என்று கூறினார்.

Today Trending News in Tamil

மேதாந்தா மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை பிரிவின் தலைவராக இருக்கும் டாக்டர் ஏ.எஸ்.சோயின் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ' 2 வயதுகூட நிரம்பாத அந்தக் குழந்தைக்கு அப்போது நாங்கள் அறுவைச் சிகிச்சை செய்தோம். மிகவும் சிக்கலான தருணம் அது. நான் அறுவைச் சிகிச்சை செய்த அனைத்து குழந்தைகளும் இயல்பான வாழ்க்கை வாழ்கின்றனர். ஆகவே, இதுபோன்ற குழந்தைகளைப் பற்றி பெற்றோர் கவலைப்படத் தேவையில்லை. சஞ்சய் கந்தசாமியின் சாதனை பெருமைமிக்க தருணங்களில் ஒன்று என குறிப்பிட்டார்.

Updated On: 21 Nov 2023 10:16 AM GMT

Related News