/* */

குன்றத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பணியிடை நீக்கம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி

ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக குன்றத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

குன்றத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பணியிடை நீக்கம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி
X
பைல் படம்.

புதிய ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல் , நீக்கம் , விலாசம் மாற்றும் என உள்ளிட்டவைகளுக்கு பொது விநியோக இணையதளத்தில் விண்ணப்பித்து உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்தாலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகவும் குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் மீது புகார் எழுந்தது.

இடைத்தரகர்கள் மூலம் அணுகினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் குறைந்த பட்சம் 1000 முதல் 5000 வரை கேட்பதாக புகார் தெரிவித்தனர் . மேலும் விண்ணப்பங்கள் முறையாக பதிவேற்றம் செய்யப்பட வில்லை என வட்ட வழங்கல் அலுவலர் நிராகரிக்கப் படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இது குறித்து விண்ணப்பதாரர்கள் வட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தன் பேரில் முறையான பதில் கிடைக்காததால் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில், இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு தெரிவித்த நிலையில் இன்று மாலை திடீரென மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி குன்றத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

Updated On: 30 July 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்