/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு துவக்கி வைப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவினை ஆட்சியர் ஆர்த்தி துவக்கி வைத்து பேசினார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு  துவக்கி வைப்பு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைகுழுவை மாவட்ட ஆட்சியில் ஆர்த்தி துவக்கி வைத்து பேசினார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் முன்னேற்றத்திற்காகவும் பள்ளிகள் செயல்பாடுகளையும் மேலாண்மை செய்வதற்கும் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-பள்ளி மேலாண்மை குழு அமைக்க தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் கல்வி வட்டத்தின் கீழ் இயங்கிவரும் களியனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவினை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி பெற்றோர்கள் மாணவர்கள் ஆகியோருடன் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இதன்பின் பெற்றோர்கள் மாணவர்களிடையே பள்ளி மேலாண்மைக் குழுவினர் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக்குழு முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெற உள்ள மேலாண்மை குழு உறுப்பினர் தேர்வு அதன் மறு கட்டமைப்பு உள்ளிட்டவைகள் குறித்து எளிய முறையில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கூட்டத்திற்கு பின் வரும் 1ஆம் தேதி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தேர்தல் நடைபெறும் எனவும் , இதில் 50 சதவீத இடங்களுக்கு பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தலைவராக பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் தாயார் இருப்பார் எனவும் , துணைத் தலைவராக பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளிகள் பெற்றோர் அல்லது தூய்மைப் பணியாளர்கள், திருநங்கை, எஸ்சி எஸ்டி வகுப்பைச் சார்ந்த குழந்தையின் பெற்றோர் இருப்பார்கள் தேர்வு செய்யப்படுவர்.

இக்குழுவில் ஆசிரியர்களின் பங்கு 25% இருக்கும் எனவும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சுய உதவி குழு உறுப்பினர் , புரவலர் என ஒரு தேர்தெடுக்கபடுவார். மொத்தம் 20 உறுப்பினர்கள் இதில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதன் மூலம் பள்ளி கட்டமைப்பு, ஆசிரியர் பணியிடங்களை நிறைவு செய்தல் நடவடிக்கை எடுத்தல் , பள்ளியின் எதிர்கால வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து இக் குழு கூடி நடவடிக்கை எடுக்கும்.

மொத்த குழு உறுப்பினர்களில் 75 சதவீதம் அதாவது 15 உறுப்பினர்கள் பெற்றோர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர்கள் , வட்ட கல்வி அலுவலர்கள் , ஊராட்சி மன்ற தலைவி வடிவுக்கரசி ஆறுமுகம், தலைமையாசிரியர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்

Updated On: 20 March 2022 12:11 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  4. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  5. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  6. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  7. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  10. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!