/* */

பிளஸ் டூ ரிசல்ட்: காஞ்சிபுரம் மாவட்ட பரந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வு முடிவுகளில் பரந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி 100 % தேர்ச்சியும், காஞ்சி முனிசிபல் பள்ளி 31.58% தேர்ச்சி பெற்றுள்ளது.

HIGHLIGHTS

பிளஸ் டூ ரிசல்ட்: காஞ்சிபுரம் மாவட்ட பரந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பரந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 90.82% மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாநில அளவில் 31 வது தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

கடந்த மார்ச் ஏப்ரல் 2023-ல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 6429 மாணவர்களும் 6712 மாணவிகளும், தொழில் பிரிவில் 480 மாணவ மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 141 மாணவ மாணவிகள் அரசு தேர்வில் கலந்து கொண்டனர்.

இதில் 5561 மாணவர்களும் 6374 மாணவிகள் என மொத்தம் 11 ஆயிரத்து 935 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் இதில் 94.96% மாணவிகளும் 86.5% மாணவிகள் என மொத்தம் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 90.82 ஆகும். மாவட்ட அளவில் கடந்த ஆண்டு 28-ம் இடத்திலிருந்து, தற்போது 31-ஆம் இடத்திற்கு சென்றுள்ளது.

மாவட்டத்தை பொருத்தவரை பரந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் 21 மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் எம் ஜி ஆர் காது கேளாதார் பள்ளி என மொத்தம் 23 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 46 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பரந்தூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

அங்கு பயின்று வந்த 36 மாணவர்கள் 45 மாணவிகள் என மொத்தம் 81 தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்

அங்கு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவன் 553 மதிப்பெண்கள் பெற்று பொருளாதாரம் , கணக்குப்பதிவியல், வர்த்தக பாடப்பிரிவில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மேலும் இப்பள்ளியில் வர்த்தக பாடத்தில் ஆறு நபர்களும், கணக்குப்பதிவியல் பிரிவில் ஒரு மாணவரும், வரலாற்றில் இரண்டு மாணவர்களும் , பொருளியலில் ஒரு மாணவன் என பத்து மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இதே காஞ்சி மாவட்டத்தில் காஞ்சிபுரம் நகரில் மிகப் பழமையான பலியான டாக்டர் பி எஸ் சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 133 மாணவர்களில் வெறும் 42 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியின் தேர்ச்சி 31.58 சதவீதமாகும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துமே எழுவது சதவீதத்திற்கும் மேல் உள்ள நிலையில் காஞ்சிபுரம் நகரில் உள்ள இப்பள்ளி நாளுக்கு நாள் பேச்சு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இதே வளாகத்தில் உள்ள ராணி அண்ணாதுரை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 109 மாணவிகள் தேர்வு எழுதியதில் 100 பேர் தேர்ச்சி பெற்று அப்பள்ளி 91.74 சதவீதம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அப்பகுதியில் ஒருவர் கூறுகையில் , இப்பள்ளியில் எங்கும் இடம் கிடைக்காத மாணவர்கள், குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றவர்கள் என பள்ளியில் பயிலுவதால், அவர்களை அதிகளவு அக்கறை எடுத்து ஆசிரியர்கள் பணி செய்வதில்லை என்பது தேர்ச்சி விகிதத்தை பார்த்தாலே தெரியும் என தெரிவித்தார்.

Updated On: 8 May 2023 10:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபியில் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்: மாட்டு வண்டி ஊர்வலத்துடன்...
  2. ஆன்மீகம்
    உப்புத் தண்ணீரை மூதாட்டிமேல் கொட்டச் சொன்ன மகாபெரியவர்!
  3. லைஃப்ஸ்டைல்
    தினமும் மாம்பழம் சாப்பிடலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குளித்த பிறகு தலை முடியை துவட்டாமல் விடுபவரா நீங்கள்?
  5. கோவை மாநகர்
    தண்ணீர் தொட்டிக்குள் மின்சாரம் தாக்கி இருவர் பலி
  6. தொழில்நுட்பம்
    ரியல்மி 13 ப்ரோ என்ன விலை?
  7. உலகம்
    மரபணு மாற்றப்பட்ட நிடோவைரஸ் அடுத்த தொற்றுநோய்க்கு வழிவகுக்கலாம் :...
  8. வீடியோ
    🔴LIVE : இடைவிடாமல் மணிப்பூரில் கொட்டும் மழை ! மக்கள் பரிதவிப்பு ! ||...
  9. ஆரணி
    இருசக்கர வாகனங்கள் பறிமுதல் : நான்கு பேர் கைது..!
  10. தொழில்நுட்பம்
    தடுமாறிய கூகுள் நிறுவனம்..! என்ன நடந்தது?