மரபணு மாற்றப்பட்ட நிடோவைரஸ் அடுத்த தொற்றுநோய்க்கு வழிவகுக்கலாம் : புதிய தகவல்..!

மரபணு மாற்றப்பட்ட நிடோவைரஸ் அடுத்த தொற்றுநோய்க்கு வழிவகுக்கலாம் : புதிய தகவல்..!
X
மரபணு மாற்றப்பட்ட Nidoviruses அடுத்த தொற்றுநோயைத் தூண்டக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Nidoviruses May Trigger the Next Pandemic, German Cancer Research Center,Nidoviruses, SARS-CoV-2

வெவ்வேறு வைரஸ்களுக்கு இடையேயான 'குறுக்கு இனப்பெருக்கம்' முற்றிலும் புதிய மாற்றப்பட்ட வைரஸ்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இத்தகைய வைரஸ்கள் மற்றொரு COVID-19 போன்ற தொற்றுநோயைத் தூண்டக்கூடும் என்று ஜெர்மன் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் (DKFZ) வைராலஜிஸ்டுகள் தெரிவித்தனர். பல்வேறு வைரஸ் இனங்கள் முதுகெலும்புகளுக்குள் புதிய நோய்க்கிருமிகளை உருவாக்குவதால் வைரஸ்களின் இந்த இயற்கையான பரிணாமம் ஏற்படுகிறது.

Nidoviruses May Trigger the Next Pandemic

"ஒரு புதிய கணினி உதவி பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி, 13 கொரோனா வைரஸ்கள் உட்பட, மீன் முதல் கொறித்துண்ணிகள் வரை பல்வேறு முதுகெலும்புகளில் முன்னர் அறியப்படாத 40 நிடோவைரஸ்களைக் கண்டுபிடித்தோம்" என்று DKFZ குழுவின் தலைவர் ஸ்டீபன் சீட்ஸ் கூறினார்.

வைரஸ்களின் ஆராயப்படாத உலகம்

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மனிதர்கள், வீட்டு விலங்குகள் மற்றும் பயிர்களுக்கு நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்கள் மீது அறிவியல் ஆய்வுகள் அதிக கவனம் செலுத்துவதால், பெரும்பாலான வைரஸ்கள் இன்னும் மனிதர்களுக்குத் தெரியவில்லை அலலது தெரியாமலேயே உள்ளது.

ஆனால், புதிய செயற்கை நுண்ணறிவு (AI)உதவி முறை மூலம், விஞ்ஞானிகள் 300,000 தரவுத் தொகுப்புகளை ஆய்வு செய்ய முடிந்தது. மேலும் ஒரே நேரத்தில் நுண்ணறிவு தரவைப் பெறவும் முடியும்.

Nidoviruses May Trigger the Next Pandemic

Nidoviruses என்றால் என்ன?

நிடோவைரஸ்கள் ரிபோநியூக்ளிக் அமிலம் (ஆர்என்ஏ) மற்றும் பொதுவான குணாதிசயங்களைக் கொண்டுள்ளன. அவை மற்ற அனைத்து ஆர்என்ஏ வைரஸ்களிலிருந்தும் வேறுபடுகின்றன. மேலும் அவற்றிற்கு இடையேயான உறவை ஆவணப்படுத்துகின்றன.

ஹோஸ்ட் (ஆதார உயிரி)விலங்குகள் ஒரே நேரத்தில் வெவ்வேறு வைரஸ்களால் பாதிக்கப்படும்போது, ​​வைரஸ் மரபணுக்களின் மறு இணைப்பின் விளைவாக ஒரு புதிய வைரஸ் முற்றிலும் வெளிவரக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

"வெளிப்படையாக, மீன்களில் நாம் கண்டுபிடித்த நிடோவைரஸ்கள் குடும்ப எல்லைகளைத் தாண்டியும் கூட, பல்வேறு வைரஸ் இனங்களுக்கு இடையே மரபணுப் பொருட்களை அடிக்கடி பரிமாறிக் கொள்கின்றன" என்கிறார் ஸ்டீபன் சீட்ஸ்.

Nidoviruses May Trigger the Next Pandemic

முற்றிலும் வேறுபட்ட குடும்பங்களில் இருந்து இரண்டு வைரஸ்கள் தொடர்பு கொள்ளும்போது வைரஸ்கள் மத்தியில் இந்த பரிணாமம் மிகவும் வெளிப்படையானது மற்றும் தீவிரமானது.

இத்தகைய பரிணாமம் வைரஸ் (புரவலன்) ஆதார உயிரி விலங்குக்கு ஆபத்தானதுடன் ஆபத்தான நோய்களை ஏற்படுத்த வழிவகுக்கும்.

"மீன் வைரஸ்களில் நாம் கண்டறிந்த மரபணு பரிமாற்றம், பாலூட்டிகளின் வைரஸ்களிலும் ஏற்படலாம்" என்று ஸ்டீபன் சீட்ஸ் விளக்குகிறார்.

வைரஸ்கள் மத்தியில் இத்தகைய இயற்கையான கலப்பினச் செயல்முறைகள், அதிக எண்ணிக்கையிலான வைரஸ்களை தங்கள் உடலுக்குள் சுமந்து செல்லும் வௌவால்களில் எளிதில் நடைபெறலாம்.

Nidoviruses May Trigger the Next Pandemic

SARS-CoV-2 கொரோனா வைரஸ் வெளவால்களிடையே மட்டுமே உருவாகியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

(புரவலன் விலங்குகள் அதாவது ஆதார உயிரி என்பதற்கு எடுத்துக்காட்டாக, கரையான்கள் அவற்றின் குடலில் வாழும் மற்றும் செல்லுலோஸை ஜீரணிக்கக்கூடிய புரோட்டோசோவாவின் புரவலன்கள். மேலும் மனித குடல் தாவரங்கள் திறமையான செரிமானத்திற்கு அவசியம். பல பவளப்பாறைகள் மற்றும் பிற கடல் முதுகெலும்புகள் தங்கள் திசுக்களில் zooxanthellae, ஒற்றை செல் ஆல்காவைக் கொண்டுள்ளன.)

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil