/* */

காஞ்சிபுரம் : பதிவேடுகளில் இல்லாத 16 சுவாமி சிலைகள்

காஞ்சிபுரத்தில் பதிவோடுகளில் இல்லாத 16 சாமிசிலைகள் கண்டுப்பிடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : பதிவேடுகளில் இல்லாத 16 சுவாமி சிலைகள்
X

காஞ்சிபுரம் ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பதிவேட்டில் இல்லாத   16  சிலைகள் கண்டு பிடிப்பு.

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பஞ்ச பூத தலங்களில் ஒன்றாக விளங்குகிற ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இத் திருக்கோயில்களில் ஏராளமான உற்சவர் சிலைகள் உள்ளது. தற்போதைய திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரான சேகர்பாபு தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் சொத்துக்கள் கோயில் ஆபரணங்கள் மற்றும் சிலைகள் குறித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் துறை செயல்படும் எனவும் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் தற்போது பதிவேற்ற திற்காக ஆய்வு மேற்கொண்டபோது இதுவரை பதிவேட்டில் இல்லாத 16 சுவாமி சிலைகள் பொக்கிஷ அறையில் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை உயர் அலுவலர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே இத்திருக்கோயிலில் பல சிலைகள் காணாமல் போய்விட்டதாகவும், சுவாமி ஆபரணங்களில் முறைகேடு‌,

பல பொருட்கள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என காஞ்சிபுரத்தில் உள்ள சிவபக்தர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் பொக்கிஷ அறையில் இருந்து 16 சிலை கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

Updated On: 19 Jun 2021 6:15 AM GMT

Related News