/* */

புனரமைக்கப்பட்ட கண்ணாடி அறையில் தாயாருடன் எழுந்தருளிய தேவராஜ பெருமாள்

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ரூ.10 லட்சத்தில் புனரமைத்த கண்ணாடி மாளிகையில் ஸ்ரீதேவி பூதேவியருடன் தேவராஜ பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் பழமையும் வரலாற்று சிறப்பும் மிக்க ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோயிலில், 1961இல் கண்ணாடி அறை புதிதாக அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 2006 இல் அந்த அறை பழுது பார்க்கப்பட்டது. இந்நிலையில் கண்ணாடிகளின் பாதரசமும் அதில் இருந்த மரக்குச்சிகளும் செல்லரித்துப் போயிருந்தது. இதனால் பெருமாளின் பக்தர்களில் ஒருவரான தாமல்.எஸ்.நாராயணன் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் முழுவதுமாக திருப்பணி செய்து கண்ணாடி அறையை புதுப்பித்தார்.

இதற்கான திறப்பு விழா, கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் முன்னிலையில் இன்று திறக்கப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட கண்ணாடி அறையில், உற்சவர் தேவராஜ சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன.

திருக்கோவில் அர்ச்சகர்கள் ஸ்தானீகர்கள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் அர்ச்சனை செய்தனர். உபயதாரர்கள் தாமஸ் நாராயணன் கோவில் நிர்வாகத்தால் கவுவிக்கப்பட்டார். பக்தர்கள் அதிகாலை நீண்ட நேரம் காத்திருந்து உற்சவர் தேவராஜ சுவாமி கண்ணாடி அறையில் தரிசித்தனர்.

தாமல் நாராயணன், ஏற்கனவே பல லட்சம் மதிப்பில் ஆபரணங்களை நன்கொடையாக திருக்கோயிலுக்கு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று நவராத்திரி உற்சவம் தொடங்குகிறது. தினசரி காலையில் பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் பெருமாளும் தாயாரும் திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் திருவீதியுலாவும் நடைபெறவுள்ளது.

Updated On: 5 Oct 2021 10:09 AM GMT

Related News