/* */

காஞ்சிபுரத்தில் தேர்தல் ஆரவாரத்தில் கொரோனாவை மறந்த பொது மக்கள்

காஞ்சிபுரத்தில் தேர்தல் ஆரவாரத்தில் கொரோனாவை பொதுமக்கள் மறந்த நிலையில் உள்ளனர். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் தேர்தல் ஆரவாரத்தில் கொரோனாவை மறந்த பொது மக்கள்
X

காஞ்சிபுரம் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பொதுமக்கள் முகக்கவசம் அணியவில்லை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. கொரோனாவை மறந்து வாழத் தொடங்கி விட்டனர்.

உலகம் முழுவதும் வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் 2019 ஆண்டு இறுதியில் கொரோனா எனும் அரக்கன் உருவாகி முதல் அலையினை அலட்சியமாக எதிர்கொண்டு இருந்ததன் காரணமாக இரண்டாவது அலை நேரலையாக விஸ்தரித்தது.

தமிழகத்தில் இரண்டாவது அலை தாக்கத்தில் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இடம் கிடைக்காமலும் , சிகிச்சைக்கான ஆக்ஸிஜன் பற்றாக்குறை , மருந்து இருப்பு குறைவு , இணை நோய் என பல காரணங்களால் பல சொந்தங்களை கொரோனா அரக்கனுக்கு அலட்சியத்தால் பலி கொடுத்தோம்.

இந்நிலையில் பரவலை தடுக்க தடுப்பூசி தற்போது செலுத்தப்பட்டு வரும் நிலையில் மீண்டும் மூன்றாவது அலை நிகழ வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க தமிழக அரசு அறிவித்தது.

இருப்பினும் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வேட்பாளர்கள் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களைக் காண பொதுமக்கள் தேர்தல் ஆரவாரத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் ஆன முக கவசம் அணிவது இல்லை, சமூக இடைவெளியை பின் பற்றுவதும் இல்லை.

இதில் பாதிக்கப்பட்ட பலர் தங்களது பெருந் துயரை வெளியிட்டும் மக்கள் அலட்சியமாகவே தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் செயல்படுவது வருத்தத்தை அளிக்கிறது. என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Updated On: 3 Oct 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  4. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  9. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  10. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!