/* */

தேர்வு அறையில் மாணவி மீது மின்விசிறி விழுந்து தலையில் காயம்

பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் தேர்வு அறையில் காயமடைந்த மாணவியை‌ தேர்வு முடிந்த பின்பே அரசு மருத்துவமனைக்கு அலட்சியமாக அனுப்பி வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

தேர்வு அறையில் மாணவி மீது மின்விசிறி விழுந்து தலையில் காயம்
X

காயம் அடைந்த மாணவி பாத்திமா.

பெரிய காஞ்சிபுரம் , மளிகை செட்டித் தெருவை சேர்ந்த தில்ஷாத் மகள் பாத்திமா சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் பயின்று வருகிறார். இந்நிலையில் இன்று செமஸ்டர் தேர்வு நடைபெற்று வந்த நிலையில் காலை பதினோரு மணியளவில் தேர்வு அறையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த பாத்திமா மீது மின்விசிறி தலையில் விழுந்துள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. பின் முதலுதவி செய்து மீண்டும் தேர்வு எழுதி ஒரு மணி நேரம் கழித்த பின்பு அவருடைய பெற்றோர்களுக்கு தெரிவித்து அவர்கள் தனது மகளை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டனர்.

அதன்பின் ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் உடல்நில பரிசோதித்த மருத்துவர்கள் தலையில் உள் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர் இதனைத் தொடர்ந்து அவர்கள் தனது மகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர். மின்விசிறிகளை முறையாக பராமரிக்க தவறிய கல்லூரி நிர்வாகம் விபத்து நேர்ந்த பின்பும் மாணவியை தேர்வு எழுத வைத்து ஒரு மணி நேரம் கழித்த பின்பு மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 30 Jun 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  2. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  3. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  5. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  6. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  7. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி