/* */

கால்கள் இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டி: பாசத்துடன் கவனித்து வரும் மூதாட்டி

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிவபுரம் பகுதியில் வசித்து வருபவர் வசந்தா மகாலிங்கம். கால்நடை வளர்ப்பில் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

HIGHLIGHTS

கால்கள் இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டி: பாசத்துடன் கவனித்து வரும் மூதாட்டி
X

 நான்கு கால்கள் இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டிக்கு வசந்தா மகாலிங்கம் பாலூட்டும் காட்சி.

ஸ்ரீபெரும்புதூர் அருகே நாலு கால்களும் இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் குழந்தை போல் பாலூட்டும் மூதாட்டியின் செய்கை அனைவரையும் நெகிழ செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், சிவபுரம் ஊராட்சியில் மூன்றாவது வார்டு பகுதியில் சிறிய குடிசை வீட்டில் வசிப்பவர் மூதாட்டி வசந்தா மகாலிங்கம். இவரது கணவர் மற்றும் மகன்கள் இறந்த நிலையில் கால்நடை வளர்ப்பது தொழிலாகக் கொண்டு அதில் வரும் வருமானம் கொண்டும் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

இந்த தள்ளாத வயதிலும் நேர்மையுடன் வாழ எண்ணி ஆடுகளை வளர்த்து வந்த நிலையில், ஒரு ஆடு சில மாதங்களுக்கு கருவூற்று இரண்டு கன்றுகளை ஈன்றது. இதில் மகிழ்ச்சி அடைந்த மூதாட்டி வசந்தா மகாலிங்கம் சற்று நேரத்திலேயே பெரும் அதிர்ச்சியை கண்டதும் கண் கலங்கினார்.

உடனடியாக அருகில் இருந்த நபர்கள் இதுகுறித்து விசாரித்த போது, ஆடு கன்று ஈன்ற போது ஒரு ஆட்டுக்குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் நடந்த நிலையில், மற்றொரு ஆட்டு குட்டி நான்கு கால்களும் இல்லாமல் பிறந்துள்ளதாக கூறி அழுதுள்ளார்.

இதுபோன்ற பிறந்த மாற்று திறனாளி மனிதர்களையே காப்பாற்ற முடியாத நிலையில், இந்த சிறிய ஆட்டுக்குட்டியை எவ்வாறு காப்பாற்றுவது என்ற நிலையை கூறி அவர்களிடம் அழுதுள்ளார்.

இருப்பினும் சிறிது நேரத்திலேயே தனது மனதை தேற்றிக்கொண்டு அருகில் உள்ள வீட்டில் இருந்து குழந்தைகளுக்கு அளிக்கும் பால் ஊட்டியை பெற்று, அதில் தான் பசிக்கு வைத்திருந்த பாலை அந்த ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் மடியிலிட்டு வழங்கிய காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது .

இது குறித்து மூதாட்டி வசந்தா கூறுகையில், அனைவரும் இழுந்து தனியாக வசிந்த அந்த நிலையில், இந்த கால்நடைகள் தான் என்னுடன் பெரிதும் பாசத்துடன் இருந்து வருகின்றன .இந்நிலையில் அதனுடைய பிரசவத்தில் இதுபோன்று நிகழ்ச்சி மனதை சிறிது நேரம் வருத்தப்பட செய்தது. மனிதனே மாற்றுத் திறனாளியாக இருந்து கடும் சிரமங்களை சந்திக்கும் நிலையில் , விலங்கினங்களை காப்பாற்றுது யார் என மனதை தேற்றிக்கொண்டு இதனை தொடர்ந்து காப்பாற்றுவிடுவேன் என தெரிவித்தார்

மேலும் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு அரசு வழங்கும் இலவச கறவை மாடு திட்டத்தில் தனக்கு கறவை மாடுகள் வழங்கினால் எவ்வித தடையின்றி அனைத்தையும் தன்னுடைய உறவினர் போல் வளர்ப்பேன் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மாற்றுத்திறனாளி, முதியோர் என பலரை இக்காலத்தில் குடும்பத்துடன் இணைத்துக் கொள்ளாமல் இல்லங்களில் சேர்க்கும் நிலையில் தன்னுடைய வாழ்நாளுக்கு துணையாகவும் , தனக்கு வருமானத்தை ஈட்டி தரும் இதனையும் வாழ்நாள் முழுவதும் பராமரிப்பேன் என உறுதியுடன் இருக்கும் இந்த மூதாட்டியின் செய்கையை வரவேற்று அனைவரும் இதனை பின்பற்ற உறுதி கொள்வோமா ?

Updated On: 4 Oct 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு