/* */

மின்சார பாதையை ஒட்டிய கட்டுமான பணி நிறுத்தம்.

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை அருகே ஆபத்தான நிலையில் செல்லும் மின்பாதையை மாற்றி கட்டிடம் கட்டும் பணிகளை தொடர அறிவுரை

HIGHLIGHTS

மின்சார பாதையை ஒட்டிய கட்டுமான பணி நிறுத்தம்.
X

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை அருகே நடைபெறும் கட்டுமானப் பணிகள் அருகே செல்லும் மின்சார பாதை 

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் நூற்றாண்டுகளைக் கடந்து ராஜாஜி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் அதிகாலை ஒரு மணி முதல் வரத் துவங்கும். வெங்காயம் , தக்காளி உள்ளிட்ட காய்கறி வகைகளை இறக்கி வைப்பதற்கு நூற்றுக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் இயற்கை உபாதைகள் மற்றும் ஓய்வு எடுத்துக்கொள்ள எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.

இதனை கருத்தில் கொண்டு காய்கறி சந்தை அருகே மாநகராட்சி ஒரு குடிநீர் , கழிவறை , ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொண்ட ஒரு தங்கும் விடுதி அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் ஓப்பந்ததாரால் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை பொது கணக்கு குழு நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது இந்த கட்டுமானப் பணிகளிலும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அக் குழுவில் இடம்பெற்றிருந்த சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கட்டிடப்பணி அருகே மின்சார வாரிய மின்பாதை செல்வதை கூட கவனிக்காமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வது மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்பதை கூட கருத்தில் கொள்ளாமல் கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் ஒப்பந்ததாரை கண்டித்தார்.

உடனடியாக மின்கம்பம், மின் பாதை உள்ளிட்டவைகளை மாற்றம் செய்த பின்னரே கட்டுமான பணிகள் தொடர வேண்டும் என உத்தரவிட்டது பேரில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள் மின் பாதை அருகே உள்ளது அதிர்ச்சி அளிப்பது மட்டுமிலலாமல் இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாது மனநிறைவை அளித்துள்ளது.

Updated On: 10 Dec 2021 4:30 AM GMT

Related News