/* */

சிறந்த விற்பனையாளர், எடையாளர்களுக்கு பரிசுகள் வழங்கிய ஆட்சியர் கலைச்செல்வி மோகன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் சிறப்பாக பணிபுரிந்த 2 விற்பனையாளர் மற்றும் 2 எடையாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது

HIGHLIGHTS

சிறந்த விற்பனையாளர், எடையாளர்களுக்கு பரிசுகள் வழங்கிய ஆட்சியர் கலைச்செல்வி மோகன்
X

காஞ்சிபுரம் மாவட்ட நியாய விலை கடைகளில் சிறப்பாக பணிபுரிந்த இரண்டு விற்பனையாளர்கள் இரண்டு எடையாளர்களுக்கு பரிசுகள் வழங்கியதை கூட்டுறவு சங்கங்களின் இணை‌ பதிவாளர் ஜெயஸ்ரீ உடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ஊழியர்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் பொது விநியோக திட்டத்தின் 300-க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு நியாய விலை கடைக்கும் விற்பனையாளர் மற்றும் எடையாளர் என இருவர் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கார்டு மூலம் பதிவு செய்து விநியோகம் செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 5 தாலுகாக்களிலும்

  • நியாயவிலைக் கடைகளை தூய்மையாக வைத்திருத்தல்,
  • நியாய விலை கடைக்கு வரும் மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுதல்
  • நியாய விலைக் கடையினை குறித்த நேரத்தில் திறந்து பொது மக்களுக்கு முறையாக புகாரின்படி பொருட்களை விநியோகித்து செயல்படுத்துதல்
  • நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை சீரான பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளுதல்
  • கடையின் விற்பனை முனைய கருவியினை சிறந்த முறையில் செயல்படுத்தி பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்குதல்

போன்ற மேற்கண்ட அனைத்து முறைகளையும் சரியாக செயல்படுத்தி ஈடுபடும் விற்பனையாளர் மற்றும் எடையாளருக்கு கூட்டுறவு துறை சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் மண்டல மேலாளர் நுகர்பொருள் வாணிபக் கழகம் அவர்களின் பரிந்துரையின் பேரில் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

சிறந்த நியாய விலை கடை விற்பனையாளருக்கான பரிசை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறும் கோபாலகிருஷ்ணன்

புள்ளலூர் நியாயவிலை கடையில் பணிபுரியும் விற்பனையாளர் கோபாலகிருஷ்ணன் முதலிடத்தையும் , இரண்டாவதாக நைனார் தெருவில் இயங்கி வரும் நியாய விலை கடை விற்பனையாளர் ஷகிலாவும் தேர்வு செய்யப்பட்டனர்

இதேபோல் சிறந்த எடையாளராக கோட்ராம்பாளையம் நியாய விலை கடையில் பணிபுரியும் ராமுவும் பெரியார் நகர் பகுதியில் பணிபுரியும் ரமணியும் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலிடத்தை பிடித்த நபருக்கு ரூபாய் 4000 இரண்டாம் இடம் பிடித்த நபருக்கு ரூபாய் 3000 , சிறந்த எடையாளராக தேர்வு செய்யப்பட்ட முதல் நபருக்கு 3000 இரண்டாம் நபருக்கு 2000 ரொக்கப் பரிசினை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கூட்டத்தில் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ , பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் மணி , கண்காணிப்பாளர் சத்திய நாராயணன், கூட்டுறவுத்துறை அலுவலர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Jun 2023 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...