/* */

முகநூலில் உதவிகள் கேட்கிறார்களா...? காஞ்சிபுரம் காவல்துறை யோசனை!

முகநூல் வழியாக உதவி கேட்டால் முகநூல் நபர்களிடம் உறுதி செய்துகொண்டு பின்னர் உதவுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

HIGHLIGHTS

முகநூலில் உதவிகள் கேட்கிறார்களா...? காஞ்சிபுரம் காவல்துறை யோசனை!
X

காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையம்


காஞ்சிபுரம் , அறம்பெரும் செல்வி தெரு பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜன் . இவர் தனது முகநூல் பக்கதினை மர்ம நபர் போலியாக உருவாக்கி அவருடைய நண்பர்களுடன் கடந்த சில நாட்களாக பழகியுள்ளார்.

இந்நிலையில் தனது உறவினருக்கு மருத்துவ உதவிக்காக பணம் தேவைப்படுவதாக பதிவிட்டு உதவி கோரியுள்ளார். இதை நம்பி பணம் அனுப்பிய பிறகு ரங்கராஜனிடம் பணம் அளித்தவர்கள் உடல்நலம் விசாரித்துள்ளனர்.

குழம்பிய நிலையில் ரங்கராஜன், தனக்கோ தனது உறவினர்களுக்கோ எவ்வித உடல் நிலை குறைபாடும் இல்லை எனவும் எதற்காக என கேட்டபோது அனைத்து சம்பவங்களை கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் முகநூல் மோசடி குறித்து புகார் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறை கூறுகையில் , பொதுமக்கள் முகநூல் வழியாக யாரேனும் உதவி கேட்டால் முகநூல் நபரிடம் அதை உறுதி செய்து கொண்டு உதவ வேண்டும் . இது போன்ற செயலால் இணையவழி குற்றங்கள் பெரிதும் குறையும் எனவும் தெரிவித்தார்.

Updated On: 31 May 2021 1:00 PM GMT

Related News