/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வில் 91.80% தேர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில்+2 அரசு பொது தேர்வை 13,518 தேர்வு எழுதியதில் 12,119 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வில் 91.80%   தேர்ச்சி
X

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்.

காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளி கல்வித் துறை சார்பாக நடைபெற்ற பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் 91.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மே மாதம் நடைபெற்ற பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்வி துறை சார்பாக 6516 மாணவர்களும், 7002 மாணவிகளும் என மொத்தம் 13 ஆயிரத்து 518 மாணவ மாணவிகள் அரசு தேர்வில் கலந்து கொண்டனர். இதில் பொதுப் பாடத் தேர்வில் 12182 மாணவ மாணவிகளும் தொழில் பாடப்பிரிவில் 636 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 12819 மாணவ மாணவிகள் அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட தேர்ச்சி 91.80 சதவீதமாகும். கடந்த ஆண்டை காட்டிலும் 0.2 சதவீதம் குறைவாக உள்ளது.

மாணவர்களின் தேர்ச்சி 88.66 சதவீதமும், மாணவிகள் தேர்ச்சி 94.74 சதவீதமாகவும் உள்ளது. மாணவர்களை காட்டிலும் மாணவியின் தேர்ச்சி விகிதம் 6.08சதவீதம் கூடுதலாக உள்ளது. இவ்வாண்டு காஞ்சிபுரம் மாவட்டம் தரவரிசையில் 31வது இடத்தில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 106 மேல்நிலைப்பள்ளிகளில் இருபத்தி ஏழு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்து உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52 அரசு பள்ளிகளில் அய்யம்பேட்டை களியாம்பூண்டி மற்றும் மவுலிவாக்கம் தைச் சேர்ந்த 3 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.48 சதவீதம் பெற்றுள்ளது.

பாடவாரியாக தேர்ச்சி விபரம் :

தமிழ் பாடப் பிரிவில் மூன்று பேரும், இயற்பியல் பாடப்பிரிவில் 6 பேரும், பொருளியல் பாடப் பிரிவில் 10 பேரும், வேதியல் பாடப் பிரிவில் 12 பேரும், புவியியல் பாடப் பிரிவில் மூன்று பேரும், வணிகவியல் பாடப்பிரிவில் 57 பேரும், கணக்குப்பதிவியல் பாடப்பிரிவில் 68 பேரும் ,உயிரியல் பாடப் பிரிவில் 14 பேரும், கணினி அறிவியலில் 36 பேரும், விவசாய பாடப்பிரிவில் 44 பேரும் ஆடிட்டிங் பிரிவில் 125 பேரும், இயந்திரவியல் பிரிவில் 20 பேரும், வணிக கணிதத்தில் 24 பேரும், கணினி பிரிவில் 20 பேரும், கணிதத்தில் இருபத்தி ஆறு பேரும் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பொறுத்தவரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாடப் பிரிவுகளில் 100% என்பது வெகுவாக குறைந்துள்ளது.

Updated On: 20 Jun 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  2. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  3. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  4. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  5. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  6. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  7. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  8. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  10. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...