/* */

காஞ்சிபுரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி

காஞ்சிபுரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி
X

காஞ்சிபுரத்தில் 1331 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மூலம் பெண்களுக்கான திருமண நிதியுதவி திட்டம் கடந்த 2011 ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அப்போது 4 கிராமாக வழங்கப்பட்டதை உயர்த்தி 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி தற்போது வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 60 ஆயிரத்து 526 பயனாளிகளுக்கு ரூ.204 கோடி நிதியுதவியும் , 313.95 கிலோ கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2020- 21 ஆம் ஆண்டில் 10 , பனிரெண்டாம் வகுப்பில் பயின்ற 619 பேர் , பட்டம் பயின்ற 712 பேர் என 5 ஒன்றியத்தை சேர்ந்த 1331 பேருக்கு ரூ.5.11 கோடி நிதியுதவியும் , ரூ.5.24 கோடி மதிப்பிலான தங்கத்தினை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி , சமூகநலத்துறை அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து இரு இடங்களில் அம்மா மினி கிளினிக் , 50 நபர்களுக்கு கறவை மாடுகள் ஒரு நியாய விலைக்கடை ஆகிய நிகழ்விலும் கலந்து கொண்டு ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் துவக்கி வைத்தார்.

Updated On: 12 Feb 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு