/* */

ஆட்சியர் அலுவலகத்தில் விதிகளை மீறி சுவரொட்டி

ஆட்சியர் அலுவலகத்தில் விதிகளை மீறி சுவரொட்டி
X

காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டப்படுகிறது. இதை தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் சுற்று சுவர்களில் எவ்வித நோட்டீஸ்களும் ஒட்ட கூடாது எனவும் , இதனை மீறும் அச்சக உரிமையாளர் மற்றும் நோட்டீஸ் ஓட்டுவோர் மீது காவல்துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு நுழைவு வாயில்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இதை கண்டு கொள்ளாத அச்சக உரிமையாளர்கள் , நோட்டீஸ் ஓட்டுபவர்கள் அதிக பார்வையாளர்களை கவர இங்கு அத்துமீறி சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.

எச்சரிக்கை பலகை அருகே நுழைவு வாயின் இருபுறமும் அதிகளவில் ஒட்டி வருகின்றனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே விதிகளை மீறுபவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காஞ்சிபுரம் பெருநகராட்சி பிற செயல்களில் எப்படி இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Updated On: 4 Feb 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  5. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்