கள்ளக்குறிச்சியில் 4ம் கட்ட சிறப்பு முகாம்: 33,341 பேருக்கு கொரோனா தடுப்பூசி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 4ம் கட்ட சிறப்பு முகாமில் 33,341 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த நான்காம் கட்ட சிறப்பு முகாமில் 33, 346 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று மூன்றாம் அலை துவங்குவதற்கு முன் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுப் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை நடத்துகிறது.

கடந்த 12ஆம் தேதி மாவட்டத்தில் 429 மையங்களில் நடந்த சிறப்பு முகாமில் 48,733 பேருக்கு தடுப்பூசியும் 19ஆம் தேதி நடந்த சிறப்பு முகாமில் 16,602 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. 26 ஆம் தேதி நடந்த முகாமில் 35,391 பேர் செலுத்திக் கொண்டனர்.

நேற்று நடந்த நான்காம் கட்ட தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் 427 மையங்களில் நடந்தது. இதில் மொத்தம் 33,341 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 7,78 ,368 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.

Tags

Next Story