/* */

அனைத்து திட்டப்பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

அரசின் அனைத்து திட்டப்பணிகளையும் குறிப்பட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தல்.

HIGHLIGHTS

அனைத்து திட்டப்பணிகளையும் குறிப்பிட்ட  காலத்திற்குள் முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
X

கலெக்டர் ஸ்ரீதர் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் கட்டுமானப் பணிகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டார்

கள்ளக்குறிச்சி மற்றும் தியாகதுருகம் வட்டாரப் பகுதியில் பல்வேறு பணிகள் தொடர்பாக கலெக்டர் ஸ்ரீதர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது கள்ளக்குறிச்சி 3.06 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகம் கட்டுமானப் பணிகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டார். இப்பணிகளை விரைந்து முடித்து அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் மற்றும் அலுவலக வாகனங்கள் வந்து செல்ல போதிய பாதை வழிகளை ஏற்படுத்திட பொதுப்பணித்துறை மற்றும் தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், கள்ளக்குறிச்சி கிளைச் சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, கிளைச் சிறையில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் சிறை வளாக பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, தியாகதுருகம் ஒன்றியம் பிரதிவிமங்கலம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உடற்பயிற்சி நிலையம் ஆய்வு செய்த கலெக்டர், உடற் பயிற்சி மையத்தினை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், இது போன்ற அரசின் அனைத்து திட்டங்களும் குறித்த பணி காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அறிவுறுத்தினார்.

பின்னர், கல்வெட்டுகுழி கிராம பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான காலியடங்கள் ஆய்வு செய்யப்பட்டு ,எதிர்கால அரசின் தேவைகளுக்கு இவ்விடங்களை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்

Updated On: 27 Aug 2021 12:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!