/* */

நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்: இளைஞர்களுக்கு எஸ்.பி., வேண்டுகோள்

சிறுவர்கள், இளைஞர்கள் நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம்: இளைஞர்களுக்கு எஸ்.பி., வேண்டுகோள்
X

கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஜியாவுல்ஹக். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர்நிலைகளுக்குச் சென்று சிறுவர்கள், இளைஞர்கள் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்' என எஸ்.பி., ஜியாவுல்ஹக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதையொட்டி பெரும்பாலான சிறுவர்கள், இளைஞர்கள் நீர்நிலைகளுக்கு சென்று குளிக்கின்றனர். அப்போது நீரில் மூழ்கி உயிரிழப்பு போன்ற அசாம்பாவிதங்கள் ஏற்படுகிறது. எனவே, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் நீர்நிலைகளுக்குச் சென்று குளிப்பதை பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது.

விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். நீச்சல் தெரிந்திருந்தாலும் நீர்நிலைகளுக்குச் சென்று குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளில் சுழல் உள்ள இடம், புதை மணல், சகதி நிறைந்த இடம், மற்றும் ஆழமான பகுதிகளின் தன்மை அறியாமல் குளிப்பதோ, டைவ் அடிப்பதோ கூடாது.

குறிப்பாக குடிபோதையில் நீர்நிலைகளுக்கு குளிக்க செல்வதைத் தவிர்க்க வேண்டும்.உயிர் பாதுகாப்பு முதலுதவி முறையினை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி., உத்தரவைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Updated On: 8 Nov 2021 12:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  2. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  3. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  4. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  5. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  6. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  7. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  9. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  10. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!