/* */

சங்கராபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு

சங்கராபுரம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தின் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் பா்ரவையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

சங்கராபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு
X

சங்கராபுரம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து கே.விவேகானந்தன் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயற்சியை மாவட்ட தேர்தல் பார்வையாளர் கே.விவேகானந்தன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், சங்கராபுரம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பார்வையாளர் கூறுகையில், மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டு கட்டங்களாக 1,889 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன.

மேலும், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய பதிவியிடங்களுக்கு வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு அளிக்கப்படும் முதற்கட்ட பயிற்சிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இத்தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் வாக்களிக்கவுள்ளதால் வாக்குச்சீட்டுகளை கையாள்வது குறித்தும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்கு செலுத்துவதற்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பின்னர், தொடர்ந்து, சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய பதவியிடங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள சங்கராபுரம் அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இம்மையங்களில் வாக்கு பெட்டிகள் இருப்பறை, வாக்குச் சீட்டுகள் பிரித்தல் மற்றும் வாக்கு சீட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ள அறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. பதற்றமான வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கிட தெரிவிக்கப்பட்டடுள்ளது என அவர் தெரிவித்தார்.

இவ்வாய்வின்போது உதவி திட்ட அலுவலர் ரத்தினமாலா, சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 24 Sep 2021 12:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்