/* */

சென்னிமலை முருகன் கோயிலில் ரூ.25.65 லட்சம் உண்டியல் காணிக்கை

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயிலில் பக்தர்கள் ரூ.25.65 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தி இருந்தனர்.

HIGHLIGHTS

சென்னிமலை முருகன் கோயிலில் ரூ.25.65 லட்சம் உண்டியல் காணிக்கை
X

சென்னிமலை முருகன் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வாராவாரம் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை, சஷ்டி, கிருத்திகை போன்ற விசேஷ நாட்களிலும், அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், இக்கோயிலின் உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று (வியாழக்கிழமை) நடந்தது. பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் சாமிநாதன் தலைமையில், சென்னிமலை கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், கோவில் ஆய்வாளர் ரவிக்குமார், அயல்பணி ஆய்வாளர் செல்வி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

இந்த பணியில், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள், கோயில் பணியாளர்கள், அறச்சலூர் நவரசம் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில், 25 லட்சத்து 64 ஆயிரத்து 795 ரூபாயை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும், 72 கிராம் தங்கம் மற்றும் 2,810 கிராம் வெள்ளியும் பக்தர்களின் காணிக்கையாக இருந்தது.

Updated On: 9 Jun 2023 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  4. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  5. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  8. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  9. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...