/* */

திண்டுக்கல் துப்பாக்கி சூடு: தென் மண்டல ஐ.ஜி. அன்பு நேரடி விசாரணை

திண்டுக்கல் துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி தென் மண்டல ஐ.ஜி. அன்பு சம்பவ இடத்திற்கு வந்து நேரடி விசாரணைநடத்தினார்.

HIGHLIGHTS

திண்டுக்கல் துப்பாக்கி சூடு: தென் மண்டல  ஐ.ஜி. அன்பு நேரடி விசாரணை
X

துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு நேரடி விசாரணை நடத்தினார்.

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் அருகே உள்ள செட்டிக்குளம் என்ற குளத்தை மீன் வளர்ப்பதற்காக மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் ராக்கி என்ற ராகேஷ்குமார் (26) குத்தகைக்கு எடுத்துள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவு குத்தகை எடுத்த குளத்தின் அருகில் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் இடது விலாவில் 6 பால்ரஸ் குண்டுகள் பாய்ந்த ராகேஷ் குமாரை உடனிருந்த நண்பர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்த பொழுது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார் .

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மோப்ப நாய் ரூபி மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர்.

இதனை அடுத்து குற்றவாளிகளை கைது செய்வதற்காக ஏ.எஸ்.பி. அருண் கபிலன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

பின்னர் தென் மண்டல காவல்துறைத் தலைவர் அன்பு சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் தென் மண்டல காவல்துறை ஐ.ஜி. அன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் நள்ளிரவு ராகேஷ் என்பவர் மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரகாஷ், கணேசமூர்த்தி, ஜான் சூர்யா, மரியபிரபு ஆகிய நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்து 10மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளிடம் இருந்து இரண்டு அறிவாள், இவர்களால் தயாரிக்கப்பட்ட நாட்டுதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது .

மேலும் காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் குற்ற பின்னணியில் வேறு குற்றவாளிகள் யாரும் இருப்பின் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

Updated On: 4 Jan 2022 3:54 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  4. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  7. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  8. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  10. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!