/* */

புதை சாக்கடையாக மாறிய ரயில்வே சுரங்க பாதை: பொதுமக்கள் வேதனை

இங்கு உருவாக்கப்பட்ட இந்த சுரங்க பாதை பயன்பாட்டிற்கு வந்து விட்டதா வரவில்லையா என்பதே இதுவரை மக்களுக்கு தெரியவில்லை

HIGHLIGHTS

புதை சாக்கடையாக மாறிய ரயில்வே சுரங்க பாதை: பொதுமக்கள்  வேதனை
X

திண்டுக்கல்லில் புதைசாக்கடையான  மாறிப்போன ரயில்வே சுரங்க பாதை.

-திண்டுக்கல்லில் புதை சாக்கடையான ரயில்வே சுரங்க பாதை மாறிப்போனதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்

திண்டுக்கல் நகரில் இருந்து திருச்சி சாலையை இணைக்க ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் செல்கின்றன. பொதுமக்கள் நடந்து செல்வதற்காக இதன் கீழ் பகுதியில் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டது.

ஆனால் இதுவரை இந்த சுரங்க பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில் தற்போது கொசுக்களின் உற்பத்தி மையமாக திகழ்கிறது.சிறியளவில் மழை பெய்தாலும் சுரங்க பாதை நிறைந்து தண்ணீர் வழிந்தோடுகிறது. தற்போது மழைநீருடன், கழிவுநீரும் தேங்கி சுரங்க பாதை புதை சாக்கடை போல் காட்சியளிக்கிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ரயில் தண்டவாளங்களை கடக்கும் போது ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காகவே இதுபோன்ற சுரங்க நடைபாதை கட்டப்பட்டு வருகிறது. ஆனால் இங்கு உருவாக்கப்பட்ட இந்த சுரங்க பாதை பயன்பாட்டிற்கு வந்து விட்டதா, வரவில்லையா என்பதே இதுவரை மக்களுக்கு தெரியாத அளவிற்கு கட்டிய நாள் முதல் தற்போது வரை மழைநீர், கழிவுநீரின் இருப்பிடமாக திகழ்கிறது.

இதில் கொசுக்களும் பல்கி பெருகுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வழக்கம்போல் ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர்.மக்கள் வரிப்பணம் மக்களுக்கு பயன்படாமல் மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறது. எனவே ரயில்வே நிர்வாகம் சுரங்க நடைபாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Updated On: 31 Dec 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...