/* */

தொற்று அபாயம்: திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்

இன்று முழு ஊரடங்கு என்பதால், திண்டுக்கல்லில் மீன்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்; இதனால் கொரோன தொற்று பரவும் அபாயம் உள்ளது.

HIGHLIGHTS

தொற்று அபாயம்: திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்
X

திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில், சமூக இடைவெளியை மறந்து, மீன் வாங்குவதற்கு திரண்ட பொதுமக்கள். 

திண்டுக்கல் மாவட்டம் சோலைஹால் தெருவில் அமைந்துள்ளது மாநகராட்சி மீன் மார்க்கெட். இங்கு மீன்கள் மொத்த வியாபாரம் மற்றும் சில்லரை வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சிறு வியாபாரிகள் அனைவரும் இங்கிருந்தே வியாபாரத்திற்காக மீன்களை வாங்கி செல்கின்றனர். இதனிடையே, தமிழக அரசு கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை மீன் மார்க்கெட்டில், மீன்கள் வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முகக்கவசம் அணியாமல், மீன்கள் வாங்க குவிந்தனர். மேலும் சமூக இடைவெளியானது காற்றில் பறந்தது. இதனால் கொரானோ தொற்று அதிக அளவில் பரவக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 16 Jan 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!