/* */

தருமபுரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்

தருமபுரியில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை, ஆட்சியர் திவ்யதர்சினி துவக்கி வைத்தார். இதில் ஏராளமானோர் பயனடைந்தனர்.

HIGHLIGHTS

தருமபுரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்
X

தருமபுரியில் இன்று மாற்றுதிறனாளிகளுக்கான தடுப்பூசி முகாமை, ஆட்சியர் திவ்யதர்சினி துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், 18 வயதிற்கு மேறபட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் அமைத்து, அவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், தருமபுரி செவிதிறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாம், இன்று நடைபெற்றது. முகாமை, தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி துவக்கி வைத்து, சுகாதார துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.

மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 17 ஆயிரம் தடுப்பூசிகள் வரபெற்ற நிலையில் 2 லட்சத்து 5 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 435 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்; இவர்களில், இதுவரை 2 ஆயிரத்து 400 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது.

இன்றைய முகாமில் ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கபட்ட, பிற்பகல் வரை, 600 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தது. முகாமிற்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இம்முகாமில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜெமினி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 24 Jun 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்