/* */

தர்மபுரி அருகே தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

தர்மபுரி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மீது பாறைகள் சரிந்ததில் தடம் புரண்டது; 2348 பயணிகள் உயிர் தப்பினர்.

HIGHLIGHTS

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து சேலம் -தர்மபுரி வழியாக பெங்களூர் வரை செல்லும் எஸ்வந்த்பூர் பயணிகள் விரைவு ரயில் 20 க்கும் மேற்பட்ட பெட்டிகளுடன் இன்று அதிகாலை சேலம்-தர்மபுரி ரயில் பாதையில் வந்து கொண்டிருந்தது.

இந்த எக்ஸ்பிரஸ் ரயில் முத்தம்பட்டி அடுத்த வனப்பகுதியில் காலை 3:30 மணி அளவில் சென்றபோது ,கடும் மழையினால் ரயில் பாதை ஒட்டி உள்ள மலைப்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்ததில் எக்ஸ்பிரஸ் ரயிலில் மையப் பகுதியில் இருந்த 5 பெட்டிகள் மீது விழுந்ததில் ரயில் தடம்புரண்டது.மேலும் ரயில்வே தண்டவாள பகுதியில் விழுந்ததால் ரயில் தடம்புரண்டது. இதனால் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. உடனடியாக பெங்களூர் மற்றும் சேலம் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு ரயிலில் கடைசி ஏழு பெட்டிகள் மூலம் சேலம் இழுத்து சென்றனர் .அந்தப் பெட்டிகள் சேலம் திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை வழியாக பெங்களூர் அனுப்பப்படுகிறது. இதேபோன்று முன்புறமாக பெட்டிகள் இருக்க பெங்களூரிலிருந்து கிரேன் உள்ளிட்ட வண்டிகள் வந்து கொண்டிருக்கிறது. இதில் ரயில்வே பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்பாதை சேதமடைந்ததால் அதை சரி செய்யும் பணியில் பணியாளர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் . உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை பெய்து கொண்டிருந்தாலும் மீட்புப் பணிகளில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், இன்று அதிகாலை 3:50 மணியளவில், ரயில் எண் 07390 கண்ணூர் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் பெங்களூரு பிரிவின் தொப்பூர்- சிவாடி இடையே தடம் புரண்டது. முதலாவதாக, B1, B2 (3வது ஏசி), S6, S7, S8, S9, S10 (ஸ்லீப்பர்) பெட்டிகளில் திடீரென பாறாங்கற்கள் விழுந்ததே இந்தச் சம்பவத்திற்குக் காரணம்.

டிஆர்எம் பெங்களூரு ஸ்ரீ ஷ்யாம் சிங், மூத்த அதிகாரிகளின் பிரிவுக் குழுவுடன், விபத்து நிவாரண ரயில் (ஏஆர்டி) மற்றும் மருத்துவ உபகரண வேனுடன் அதிகாலை 4.45 மணிக்கு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். ஈரோட்டில் இருந்து ஏஆர்டியுடன் டிஆர்எம் சேலம் குழுவினரும் அதிகாலை 5.30 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

ரயில் இருந்த அனைத்து 2348 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். உயிர்ச்சேதம்/காயம் எதுவும் ஏற்படவில்லை. மருத்துவக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. பின்பக்க 7 பெட்டிகளின் பாதிப்பில்லாத பகுதி, பயணிகளுடன் சேலம் நோக்கி சிறப்பு ரயிலில் திருப்பத்தூர் வழியாக பெங்களூருக்கு சென்றது. பயணிகளின் வசதிக்காக தொப்பூரில் 15 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் 5 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 3 பெட்டிகளின் முன்பகுதி தர்மபுரிக்கு இழுத்து செல்லப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது

தருமபுரி, சேலம் மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சஞ்சீவ் கிஷோர் தலைமையிலான மூத்த அதிகாரிகள், பொது மேலாளர், ஸ்ரீ பி கே மிஸ்ரா கூடுதல் பொது மேலாளர், ஸ்ரீ எஸ்பிஎஸ் குப்தா முதன்மை தலைமைப் பொறியாளர், ஹூப்பள்ளி தலைமையக பேரிடர் மேலாண்மைப் பிரிவில், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 12 Nov 2021 10:20 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...