/* */

தர்மபுரி அருகே ரூ.5 கோடிக்கு ஆசைப்பட்டு ரூ.20 இலட்சம் இழந்த மருத்துவர்

தர்மபுரி அருகே மருத்துவர் ஒருவர் ரூ.5 கோடிக்கு ஆசைப்பட்டு ரூ.20 இலட்சம் இழந்துள்ளார்; போலீசார் போல் நடித்து மிரட்டலுக்குள்ளானார்.

HIGHLIGHTS

தர்மபுரி அருகே ரூ.5 கோடிக்கு ஆசைப்பட்டு ரூ.20 இலட்சம் இழந்த  மருத்துவர்
X

பைல் படம்.

பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் நான்கு ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சரவணக்குமார்,47. மருத்துவர். இவர் அம்மா மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசக்தி 40. மருத்துவர்களான இவரும் மருத்துவமனையை விரிவுபடுத்துவதற்காக தனியார் வங்கியில் கடன் வாங்க விண்ணப்பித்துள்ளனர்.

கடன் கிடைக்காததால், மதுரை சேர்ந்த ராஜபாண்டி என்பவர் மூலம் தர்மபுரியை சேர்ந்த சிவக்குமார் அறிமாகியுள்ளார். அவர் பைனான்ஸ் நடத்துவதாக கூறியுள்ளார். அவரிடம் பணம் வாங்கி தருகிறேன் என ராஜபாண்டி ஆசைவார்த்தை கூறியதையடுத்து, சரவணகுமார் நேற்று முன்தினம் தர்மபுரி வந்துள்ளார்.

அவர்கள் தர்மபுரி அடுத்த பழைய தர்மபுரியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளனர். பின்பு நேற்று ராஜபாண்டி, சரவணகுமார் சந்தித்து மதியம் ஒன்று முப்பது மணி அளவில் ரூபாய் 5 கோடி தந்து விடுகிறேன் என்றும் ,கமிஷன் தொகை ரூ.20 லட்சத்தை எடுத்து வருமாறு கூறியதால் சரவணகுமார் ரூபாய் 20 லட்சத்தை எடுத்துக்கொண்டு காரில் சென்றுள்ளார்.

அப்போது சிவக்குமார் என்பவர் மருத்துவரிடம் காரில் உள்ள டிக்கியில் மூன்று பெரிய பைகளை காட்டி அதில் ஐந்து கோடி பணம் உள்ளது. முதலில் கமிஷன் தொகை 20 லட்சம் தருமாறும் பின்பு ரூ.5 கோடியை நீங்கள் எடுத்துச் செல்லலாம் என்று கூறியுள்ளார்.

பின்னர் காரிலேயே அழைத்துச் சென்றுள்ளனர். அதியமான்கோட்டை அருகிலுள்ள ஜீவா நகரில் சென்று கொடுப்பதாக அழைத்துச் சென்றார்.

அங்கு போலீஸ் உடையணிந்து நான்கு பேர் சரவணகுமார் வந்த காரை நிறுத்தி அவரை மிரட்டியுள்ளனர். பின்பு 20 லட்சத்தை பெற்றுக்கொண்ட ராஜபாண்டி, சிவக்குமார், போலி போலீஸ் உடையில் வந்த 4 பேர் உள்பட அனைவரும் தப்பி சென்று விட்டனர்.

இதுனையடுத்து, நம்பிக்கை துரோகம் செய்து எனது இருபது லட்சம் பணத்தை ஏமாற்றி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தர்மபுரி நகர காவல் நிலையத்தில் மருத்துவர் சரவணகுமார் இரவு புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் இரட்டிப்பு மோசடி ஈடுபட்டுள்ளவர்களை தேடி வருகின்றனர். மருத்துவர் சரவணகுமார் உடன் அவரது டிரைவர் பிச்சைமுத்து மற்றும் உதவியாளர்கள் பாலு, சதாம் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 7 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்