/* */

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மங்களுரிலிருந்து 951 மெ.டன் யூரியா வருகை

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மங்களுரிலிருந்து சரக்கு இரயில் முலம் 951 மெ.டன் மங்களா யூரியா, 373 மெ.டன் மங்களா டி.ஏ.பிவந்துள்ளது.

HIGHLIGHTS

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மங்களுரிலிருந்து 951 மெ.டன்  யூரியா வருகை
X

தர்மபுரி இரயில் நிலையம் வந்து சேர்ந்த யூரியா.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மங்களுரிலிருந்து 951 மெ.டன் மங்களா யூரியா, 373 மெ.டன் மங்களா டி.ஏ.பி சரக்கு இரயில் முலம் வந்திறங்கியுள்ளது.

தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வசந்தரேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தர்மபுரி மாவட்டத்திற்கு மங்களுரிலிருந்து இருந்து 951 மெ.டன் யூரியா, 373 மெ.டன் டி.ஏ.பி சரக்கு இரயில் மூலம் இன்று தர்மபுரி இரயில் நிலையம் வந்து சேர்ந்தது.

தருமபுரி வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு), தாம்சன், தர்மபுரி கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்துர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தனியார் உரக்கடைகளுக்கு மங்களா யூரியா உரம் லாரிகள் மூலம் பிரித்தனுப்படும் பணியினை நேரில் ஆய்வு செய்தார்.

தர்மபுரி மாவட்டத்திற்கு 280 மெ.டன் யூரியாவும், டி.ஏ.பி 92 மெ.டன். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 481 மெ.டன் யூரியாவும், டி.ஏ.பி 219 மெ.டன். சேலம் மாவட்டத்திற்கு 150 மெ.டன் யூரியாவும், டி.ஏ.பி 52 மெ.டன். திருப்பத்துர் மாவட்டத்திற்கு 25720 மெ.டன் யூரியாவும், டி.ஏ.பி 5 மெ.டன். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 20 மெ.டன் யூரியாவும், டி.ஏ.பி 5 மெ.டன் லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டது. இந்த ஆய்வின் போது தர்மபுரி எம். சி.எப் விற்பனை அலுவலர் பரணி உடனிருந்தனர்.

விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி அரசு நிர்ணயித்த விலையில் யூரியா மற்றும் டி.ஏ.பி பெற்று பயனடையுமாறு தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வசந்தரேகா கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 8 Feb 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...