/* */

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த கூட்டம்; மருத்துவ பணியிட நேர்கானல் ஒத்திவைப்பு

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ பணியிடங்களுக்கான நேர்கானலில் கூட்டம் கூடியதால் மாவட்ட ஆட்சியர் ஒத்திவைத்தார்.

HIGHLIGHTS

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த கூட்டம்;  மருத்துவ பணியிட நேர்கானல் ஒத்திவைப்பு
X

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ பணியிடங்களுக்கான நேர்கானலில் குவிந்த கூட்டம்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுகாரணமாக ஒப்பந்த அடிப்படையில் மருந்தாளர்கள், கதிர்வீச்சாளர்,ஆய்வக நுட்ப உதவியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு நேர்காணல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுமார் 700 மேற்பட்ட ஆண்களும், பெண்களும் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.

மாவட்ட நிர்வாகத்தின் முறையான திட்டமிடல் இல்லாததால் சமூக இடைவெளி இல்லாமல் நேர்கானலுக்கு வந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர வைக்கப்பட்டதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதனை அறிந்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் நேர்காணலை ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலமாக இன்று 750 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அவர்கள் பகுதி பகுதியாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார் எனவும் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

Updated On: 4 Aug 2021 2:34 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்