/* */

கலப்பட மீன்கள் விற்கப்படுகிறதா? உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

கடலூர் முதுநகர் மீன்பிடி தளம் பகுதியில் கலப்பட மீன்கள் விற்கப்படுகிறதா என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

HIGHLIGHTS

கலப்பட மீன்கள் விற்கப்படுகிறதா? உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு
X

மீன்களின் தரம் குறித்து கடலூர் மீன் மார்க்கெட் பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. கடலூர் துறைமுக மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் குவிவது வழக்கம்.

ஆனால், கொரோனா நோய்தொற்று அபாயத்தை மறந்து பொதுமக்கள் முகக்கவசம் மற்றும் பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்காமல் மீன்களை வாங்கிச் சென்றனர்.

இதனிடையே துறைமுக பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பி.கே.கைலாஷ்குமார் தலைமையில் குழுவினர் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர். வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மீன்களில் பார்மலின் கலந்த கலப்படம் செய்யப்பட்ட மீன்கள் உள்ளதா? கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? மீன்களின் தரம் குறித்தும் கடலூர் மீன் மார்க்கெட், காரைக்காடு சந்தை மற்றும் கடலூர் முதுநகர் மீன்பிடி தளம் ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On: 5 Sep 2021 1:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்