/* */

கடலூர் மாவட்டத்தில் வெள்ள அபாயம்: பாதுகாப்பாக இருக்க அறிவுரை

கடலூர் மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் - பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்.

HIGHLIGHTS

கடலூர் மாவட்டத்தில் வெள்ள அபாயம்:  பாதுகாப்பாக இருக்க அறிவுரை
X

கோப்பு படம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கடலூர் மாவட்டத்தின் முக்கிய ஆறுகளான மணிமுத்தாறு, தென்பெண்ணை, கெடிலம் ஆகிய ஆறுகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடுவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் இருக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தாழ்வான பகுதியில் உள்ள மக்களும், தங்களுக்கு தேவையான முக்கிய ஆவணங்களான குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் சார்பில் தண்டோரா மூலம் ஆறு மற்றும் நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம் என விழிப்புணர்வும் செய்யப்பட்டு வருகிறது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையினால், நீர்நிலைகள் மற்றும் அணைக்கட்டுகள் நிரம்பி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரினால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை, அருகாமையில் உள்ள மாவட்டங்களில் பெய்து வரும் மழை நீர், வடிகால் மாவட்டமாக திகழ்கிறது. இதனால் அடிக்கடி கடலூர் மாவட்டம் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அதை சரி செய்யும் வகையில் மழைநீரை சேமித்து நிலத்தடி நீரை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Updated On: 8 Nov 2021 12:20 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  3. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  4. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  5. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  6. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  7. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  10. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!