/* */

கடலூர் வெள்ளி கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கியது அரிய வகை ஆமை

கடலூர் வெள்ளி கடற்கரையில் முட்டை இடுவதற்காக வந்த ஆலிவ் ரெட்லி வகையை சேர்ந்த ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

HIGHLIGHTS

கடலூர் வெள்ளி கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கியது அரிய வகை ஆமை
X

கடலூர் வெள்ளி கடற்கரையில் இறந்த நிலையில் ஒதுங்கிய ஆமை.

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தொடங்கி மே மாதம் வரை முட்டை இடுவதற்காக கடற்கரை நோக்கி ஆமைகள் வருவது வழக்கம். அரிய வகைகளில் ஒன்றான ஆலிவ் ரெட்லி ஆமை கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் இறந்த நிலையில் ஆமை கரை ஒதுங்கியது.

கடலுார் தேவனாம்பட்டிணம் சில்வர் பீச்சில் நேற்று மாலை 25 கிலோ எடை கொண்ட ஆமை இறந்து கிடப்பதாக வனத் துறையினர் மற்றும் பாம்பு பிடிக்கும் ஆர்வலர் செல்லா ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர் இறந்த ஆமையை மீட்டு கரையோரத்தில் புதைத்தனர்.

இறந்த ஆமை ஆலிவ் ரெட்லி வகையைச் சேர்ந்தது எனவும், முட்டையிட கரைக்கு வரும் போது, மீன்பிடி வலைகளில் சிக்கி காயமடைந்து இறந்திருக்கலாம் அல்லது அலையின் சீற்றம் காரணமாக முச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 2 Jan 2022 3:20 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்