/* */

கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வங்கி ஊழிய்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

HIGHLIGHTS

கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
X

வங்கி ஊழியர்களின் போராட்டத்தினால் கடலூரில் உள்ள ஒரு வங்கி  வெறிச்சோடி காணப்பட்டது.

வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற கோரி நாடெங்கும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 90 ஆயிரம் பேர் பங்கேற்று உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் சுமார் 190 க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளில் இருந்து ஊழியர் அதிகாரிகள் என மொத்தம் சுமார் 750 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாக வங்கி சேவைகள் முடங்கி உள்ளது. ‌வங்கி சேவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாளில் மட்டும் சுமார் 500 கோடிக்கும் மேல் பண பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது எனவும், இந்தப் போராட்டமானது வங்கி ஊழியர்களுக்கு மட்டுமின்றி பொது மக்களுக்குமான போராட்டம் ஆகும், ஆதலால் பொதுமக்கள் தங்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும்பாலான வங்கிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Updated On: 17 Dec 2021 4:06 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  10. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்