/* */

கடலூரில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் அதிமுக சார்பில் நிவாரணம்.

கடலூரில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்

HIGHLIGHTS

கடலூரில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் அதிமுக சார்பில் நிவாரணம்.
X

பொதுமக்களுக்கு ஆறுதல் கூறும் முன்னாள் அமைச்சர் சம்பத்

சாத்தனூர் அணை திறக்கப்பட்டதை அடுத்து தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அதன் காரணமாக கடலூர் தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் 15 மேற்பட்ட கிராமங்களுக்குள் புகுந்தது.

தொடர்ந்து படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தரவில்லை. கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம் சி சம்பத், வெள்ளநீர் புகுந்த ஆல்பேட்டை, திடீர் குப்பம், தேவனாம்பட்டினம், குண்டு சாலை ரோடு ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து பிஸ்கட் ரஸ்க் உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் வழங்கினார். அப்போது எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் குமார், நகர துணைத் தலைவர் கந்தன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 20 Nov 2021 2:31 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்