/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் பழுதடைந்த 826 கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் பழுதடைந்த 826 கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் பழுதடைந்த 826 கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை
X

செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத் 

செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிக்கல்வித் துறை சார்பாக ஆதிதிராவிட நலத் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பு கீழ் இயங்கும் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை கணக்கீடு செய்யும் பணி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை பராமரிப்பில் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்கள் 41 எண்ணிக்கையும், பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பழுதடைந்து உள்ள கட்டிடங்கள் 119 எண்ணிக்கையும், ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்கள் 666 எண்ணிக்கையும் உள்ளது.

மொத்தம் 826 பழுதடைந்த கட்டிடங்கள் உள்ளது என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆய்வு செய்யப்பட்ட பழுதடைந்த கட்டிடங்களில் 196 கட்டிடங்களை இடிக்க நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றும் 173 கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் நிலுவையில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை ஆய்வு செய்யப்பட்டு இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத் தெரிவித்துள்ளார்

Updated On: 21 Dec 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  2. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  5. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  6. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  7. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு தலைமை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செவிலியர் தினக்