/* */

செங்கல்பட்டு-மாமண்டூர் பாலாற்று பாலம் சீரமைப்பு : மாற்றுப் பாதையில் வாகனங்கள்

செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பாலாற்று பாலத்தில் சீரமைப்பு பணி நடப்பதால் மாற்றுப்பாதையில் வாகனப் போக்குவரத்து இயக்கம்

HIGHLIGHTS

செங்கல்பட்டு-மாமண்டூர் பாலாற்று  பாலம் சீரமைப்பு : மாற்றுப்   பாதையில் வாகனங்கள்
X

செங்கல்பட்டு மாமண்டூர் பாலாற்று பாலம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் வழியே கடக்கிறது . இத் தடத்தில் , செங்கல்பட்டு அடுத்த , மாமண்டூர் பகுதியில் வாகன போக்குவரத்திற்காக 1955 ஆம் ஆண்டு பாலாற்றுக்கு குறுக்கே பாலம் கட்டப்பட்டது. அதன்பின்பு தேசீய நெடுஞ்சாலையில் வாகனங்கள் போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியது.அதைத்தொடர்ந்து,போக்குவரத்தை சமாளிப்பதற்காக, 1985 ஆம் ஆண்டில் பாலாற்றின் குறுக்கே மற்றோரு புதிய பாலம் கட் டப்பட்டது.இதையடுர்து இருவழி மார்க்கமாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் 1955 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் பழுதடைந்துள்ளாதால், பாலத்தினை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படுள்ளது.தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள்,கனரக வாகனங்கள்,கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தொடா்ந்து கடந்து செல்லுவதால்,பாலத்தின் பராமரிப்பு பணி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பராமரிப்ப பணி காரணமாக இன்று காலை போக்குவரத்து பழைய பாலத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து மாமண்டூா் பாலத்தில் செல்லும் வாகனங்கள் மாற்று பாதைகளில் திறுப்பி அனுப்பப்படுகின்றன.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இரு பாலங்களிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பாலத்தில் அதிக எடையுடைய கனரக வாகனங்கள் மாமண்டூர் பழைய மேம்பாலத்தில் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது.மாற்றுவழியில் செல்ல , ஏற்பாடு செய்துள்ளனர். திருச்சியில் இருந்து வரும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் , படாளம் , புக்கத்துறை கூட்டுசாலை , நெல்வாய், பழையசீவரம் வழியாக, சென்னை செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இருமாா்க்கங்களிலும் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மிகவும் குறைந்த வேகத்தில் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதனால் பாலாற்றை கடக்கும் வாகனங்கள் அனைத்தும் காலதாமதமாக இயக்கப்படுகின்றன.

Updated On: 8 Feb 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்