/* */

கூடுவாஞ்சேரியில் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை

HIGHLIGHTS

கூடுவாஞ்சேரியில் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
X

கூடுவாஞ்சேரியில் தேங்கிக்கிடக்கும் கழிவு நீர்

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டில் இருக்கும் குப்பைகள் கால்வாய்கள் இல்லாததால் கழிவுநீருடன் சேர்ந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் பேரூராட்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர். ஆனால் பேரூராட்சி சார்பில் சாலையோரமாக உள்ள குப்பைகளை மட்டும் மேலோட்டமாக அகற்றிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அப்பகுதியில் குப்பைகளுடன் அருகில் உள்ள சாக்கடைநீர் கலந்து கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள கால்வாய்களை மறு சீரமைத்து கழிவுநீர் செல்வதற்கும், முறையாக குப்பைகளை அகற்றுவதற்கும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 9 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு