/* */

மணப்பாக்கம் கன்னியம்மன் கோயிலில் கொரோனா விதி மீறல், தொற்று பரவும் அபாயம்

மணப்பாக்கம் கன்னியம்மன் கோயிலில் கொரோனா விதி முறைகளை மீறி பக்தர்கள் குவிந்து வருவதால், தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மணப்பாக்கம் கன்னியம்மன் கோயிலில் கொரோனா விதி மீறல், தொற்று பரவும் அபாயம்
X

மணப்பாக்கம் கன்னியம்மன் கோயிலில் கொரோனா விதி முறைகளை மீறி பக்தர்கள் குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மணப்பாக்கம் கன்னியம்மன் கோயில் கோயிலில் ஆடி மாதத்தில் தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்த கோவிலுக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், இன்று காலை முதல் மணப்பாக்கம் கன்னியம்மன் கோயிலில் பக்தர்கள் வழிபட தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது இதனைத்தொடர்ந்து இன்று காலை முதல் கோயில் நடை சாத்தப்பட்டது.

இன்று காலை முதல் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த ஏராளமான பொதுமக்கள் அங்கு சமூக இடைவெளியின்றி கூடியதால் கொரொனா பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கு வந்த போலீசார் கோயில் நுழைவாயிலை பூட்டி கூட்ட .நெரிசலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர்கள் கூறுகையில் மாவட்ட நிர்வாகம் நேற்று மாலை தான் கோயிலில் பக்தர்கள் வழிபட தடைவிதித்துள்ளனர்.

ஆனால் முன்கூட்டியே அறிவித்திருந்தால் இது போன்ற கூட்டம் கூடி இருக்காது எனவும் தமிழகத்தின் பல பகுதியிலிருந்து பக்தர்கள் வந்துள்ளனர்.

போலீசார் தற்போது கோயில் வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை இதன் காரணமாக மக்கள் திரும்பிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினர்.

Updated On: 6 Aug 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!